--- --:--:-- --

ஒரே இரவில் வெள்ளக்காடான சென்னை..! தவிக்கும் மக்கள்..!

10

சென்னையில் ஒரே இரவில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்ததால் சாலையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையில் நேற்று மேலும் சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலையில் நள்ளிரவில் கன மழை கொட்டி தீர்த்தது.

 

நேற்று தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. கனமழை காரணமாக காய்கறி வியாபாரிகள் பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். கார்கள், இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்ததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

 

இரவில் பல மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி இருந்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகளவில் காணப்பட்டது. கடற்கரை சாலை ராமகிருஷ்ணன் சாலை போன்ற முக்கிய சாலைகளிலும் சுரங்கங்களிலும் தண்ணீர் தேங்கியது.

 

இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கத்தில் 18 சென்டி மீட்டரும், செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வீடுகளுக்குள் மழை புகுந்தது. இதனால் இரவு முழுவதும் தவித்த குடியிருப்புவாசிகள் முடிந்த பின்னரும் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon