--- --:--:-- --

இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தாலேயே வின் கமாண்டர் அபிநந்தன் விடுவிப்பு..!

9

ந்தியா வின் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்காவிடில் இந்தியா தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் பேசிய அயாஸ் சாதிக் என்ற உறுப்பினர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படையின் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டதை சுட்டிக்காட்டினார்.

 

பிடிபட்ட நாள் அன்று இரவு 9 மணிக்குள் அவரை விடுவிக்காவிட்டால் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி மன்றாடியதாகவும் கூறினார்.

 

இதன் காரணமாகவே அபிநந்தனை விடுவிக்க பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டதாகவும் சாதிக் குறிப்பிட்டார். அபினந்தனின் விடுதலை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சாதிக் இவ்வாறு பேசியிருப்பது அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon