--- --:--:-- --

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கிய கஞ்சா எண்ணெய்..!

5

மும்பையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்த வழக்கு விசாரணையில் ஹிந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் மற்றும் புழக்கம் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த விசாரணையின்போது சுசாந்தின் முன்னாள் மேலாளர் ஜெயாசாகாவுடன் 2017ஆம் ஆண்டில் போதை பொருள் குறித்து படுகோனியின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் சாட்டிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தீபிகா படுகோனேயிடமும் கரிஷ்மாவிடமும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி இருந்தனர்.

 

இந்நிலையில் மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள கரிஷ்மா வீட்டில் நேற்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு பாட்டில்கள் கஞ்சா எண்ணெய் உள்ளிட்டவை சிக்கியுள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சோதனையின்போது கரிஷ்மா வீட்டில் இல்லை எனவும் அவருடைய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதையடுத்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் வீட்டிலிருந்தோரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபிகாவின் மேனேஜர் தலைமறைவாகி விட்டதாக கருதி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon