--- --:--:-- --

திருச்சியில் விவசாயிகள் உடலை புதைத்து போராட்டம்

1522997364816

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து திருச்சியில் காவிரி ஆற்று மண்ணில்உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதால் தண்ணீர் வரப்பில் தாமதாம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தேசிய தென்னிந்திய நதி இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் காவிரி ஆற்று பகுதியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தி நீரை பெற்று தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon