மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த முடியவில்லை- ஸ்டாலின்

மறைந்த பல தலைவர்களின் போராட்டங்களினால் தான் மும்மொழிக்கொள்கையை தமிழகம் இன்றும் எதிர்த்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மீனாட்சி மஹாலில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் மற்றும் தீர்மானக்குழு உறுப்பினர் சுப்பையன் திரு உருவ படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் ராமநாதன், சுப்பையன் போன்ற தலைவர்கள் பல்கலைக்கழகங்களாக இன்றும் திகழ்கின்றனர் என்று பெருமிதத்துடன் கூறினார்.


Leave a Reply