உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியின் முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை , சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிரிஷ்ணன் மற்றும் மாவட்ட கல்வி உதவி அலுவலர் ராஜசேகர் , பள்ளி தலைமை ஆசிரியர் ராமலக்ஷ்மி ஆகியோர் தனியார் ஹோட்டலில் உணவு உண்பதற்கான கூப்பன்களை வழங்கினர்.