--- --:--:-- --

ரெம்டெசிவர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா..!

8.1

மெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க அம்மாநில உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் தடுப்பு மருந்து பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

 

இருப்பினும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தையே அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. கடந்த மே மாதம் ரெம்டெசிவிர் மருந்துக்கு அம்மாநில சுகாதாரத்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

 

தற்போது கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க அம்மாநில உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் அளித்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளால் நோயாளிகளுக்கு எந்தவித பலனும் அளிக்கவில்லை என உலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்திருந்தது.

Leave a Reply

Right Menu Icon