பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் மோசடி..!
சென்னை வண்ணாரப்பேட்டை அருகே பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சேர்ந்தவர் ராஜகுமாரன். தனது குடும்ப கஷ்டத்தை புலியங்குடியில் அவர் சந்தித்த சாமியாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது பில்லி சூனியம் இருப்பதாகவும் அதை எடுக்க 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கோழிகளுடன் சென்னையில் வந்து தன்னை சந்திக்கும்படி சாமியார் கூறியுள்ளார்.
இதை நம்பி தனது மினி வேனை 5 லட்சத்திற்கு விற்ற ராஜகுமாரன் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கோழியுடன் உறவினர் நாசருடன் சென்னை வந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சாமியாரை சந்தித்து உள்ளார்.
ராஜகுமாரனிடம் இருந்து பணம் மற்றும் கோழியைப் பெற்றுக் கொண்ட சாமியார் பூஜை பொருள் வாங்குவதாக கூறிச் சென்றவர் திரும்பாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து ராஜகுமாரன் போலீசில் புகார் அளித்தார்.






