--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தகவல்..!

3

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரொனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்தார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஷ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியது.

 

இந்த தடுப்பூசிக்கான இறுதிகட்ட பரிசோதனை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் பிரேசிலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோடிஜெனிரோ பகுதியை சேர்ந்த அவருக்கு 28 வயது என்பது தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon