வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்ட கன்னட நடிகர்..!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கன்னட நடிகர் ஒருவர் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டுகால் பகுதியை சேர்ந்த சுரேந்தரா என்பவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் பண்டுவாள் காவல் நிலையத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மங்களூரு பி சி ரோடு பகுதியில் உள்ள வீட்டில் சுரேந்திரா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொல்லப்பட்ட சுரேந்திரா பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.






