தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 3094 பேருக்கு பாதிப்பு… 50 பேர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து 3094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் இன்று 3094 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 4,403 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கு கீழாக 857 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,91,754 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது 36,734 சிகிச்சை பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இன்று 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






