கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள கட்டுரையில் மக்களிடம் கொரோனா பாதிப்புக்கு பின் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
சில நேரங்களில் கொரொனா கிருமிகள் கற்பஸ் என்ற வைரஸை பின்பற்றுவதாக தெரிவித்துள்ள அவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் காது கேளாமை குறைபாடு உண்டாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.






