130 மில்லியன் ஆண்டுகளுக்கு டைனோசரின் காலடி தடத்தை 5 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான்..!
சீனாவில் 5 வயது சிறுவன் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடி தடங்களை கண்டறிந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் தனது பெற்றோருடன் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்றபோது அங்கிருந்த காலடித்தடங்களை கண்ட அந்த சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் அது பறவை போன்ற டைனோசர் கால் தடம் என்பதும், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மணல் மற்றும் சேற்றில் இருந்த பதிவு கல்லாக மாறி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.







