ரஷீத் கான் மனைவி குறித்து கூகுளில் தேடும்போது அனுஷ்கா ஷர்மா போட்டோ வருவதால் குழப்பம்..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி குறித்து கூகுளில் தேடும்போது அதற்கு பதிலாக நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பெயரும் படமும் வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்கா ஷர்மா, பிரீத்தி ஜிந்தா ஆகியோர் தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் என்று கிரிக்கெட் வீரர் ரசீத் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதையொட்டிய செய்திகளின் அடிப்படையில் ரசீத்தின் மனைவி அனுஷ்கா சர்மா என்ற வகையில் கூகுள் தகவல்கள் மாற்றி அமைக்கப் பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.







