திருவாடானையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விரைந்து வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாடானை பங்களாவில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவசாய சங்க, ஒருங்கிணைப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு 2017 18 மற்றும் 2018- 19 வருடங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனுக்கள கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் இதுநாள்வரை இல்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பயிர் காப்பீட்டுத் இழப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானங்களின் அடிப்படையில் வருகிற 20-ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் வழங்காத பட்சத்தில் 21ஆம் தேதி திருவிழா நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் முக்கிய நிர்வாகிகள் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.





