தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கொரோனா தொற்று… உயிரிழப்பு 71 பேர்.. இன்று 5,548 பேர் குணமடைந்துள்ளனர்!
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 5,548 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நோயில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 575212 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அரசு மருத்துவமனையில் 41 பேர், தனியார் மருத்துவமனையில் 30 பேர் என 71 பேர் உயிரிழந்துள்ளனர. இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 81,128 மாதிரிகளும், 79,279 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதுவரை 78,63,864 மாதிரிகளும், 76,34,561 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.







