நாகை அருகே ஆதரவற்ற கிடந்த முதியவரின் சடலத்தை தானே குழி தோண்டி அடக்கம் செய்த காவலரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நாகூர் தர்காவில் ஆதரவற்று இருந்த முதியவர் ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது உடல் ஆதரவற்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தங்கராஜ் தானே முன்வந்து குழிதோண்டி உடலை அடக்கம் செய்தார்.