--- --:--:-- --

கடலைப்பருப்பு தொண்டையில் சிக்கியதால் 18 மாத குழந்தை உயிரிழப்பு..!

2

சாப்பிடும்போது கடலைப்பருப்பு தொண்டையில் சிக்கியதால் 18 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்துள்ளது. செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரது ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடலைப்பருப்பு சாப்பிட்ட போது அது தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

அதனால் மயங்கிய குழந்தையை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தைகளுக்கு எதை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon