--- --:--:-- --

ராமகோபாலன் உடலுக்கு திருச்சியில் இறுதிசடங்கு..!

1

?????????????????????????????????????????????????????????

றைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடலுக்கு திருச்சிக்கு அருகே உள்ள சீராத்தூர் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமகோபாலன் அனுமதிக்கப்பட்டார்.

 

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். கொரொனா பாதிப்பால் மரணம் அடைந்த காரணத்தால் அவரது உடல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக 15 நிமிடம் வைக்கப்பட்டது.

 

இந்து அமைப்பினர் மந்திரங்கள் ஓதியும், பாராயணம் பாடியும் அஞ்சலி செலுத்தினர். பாஜக மூத்த தலைவர் இல கணேசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த ராமகோபாலன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து அதன் மாநில அமைப்பு பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

 

1980களில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரானார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் சிலை பிரதிஷ்டை செய்வது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் விநாயகர் சிலைகளை நிறுவியது என தான் சார்ந்த அமைப்புக்கான பணிகளை மேற்கொண்டவர் ராமகோபாலன். மதமாற்றம் போன்ற பிரச்சினைகளில் தீவிரமாக இயங்கியவர்.

Leave a Reply

Right Menu Icon