--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5546 பேருக்கு கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் 5501 பேர்…! 70 பேர் உயிரிழப்பு!!

10.1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 5501 பேர் சிகிச்சையில் குணமடைந்த நிலையில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறைந்தபாடில்லாமல் கடந்த 2 மாதங்களாக ஒரே சீரான வேகத்தில் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5546 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5501 ஆகும். சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,281 பேர் ஆவர்.

 

இன்று கொரானா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 70 பேர் ஆவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9453 ஆகும். சென்னையில் தொற்று பாதிப்பு கூடிக் கொண்டே தான் செல்கிறது. இன்று 1277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் கடந்த சில நாட்களாக அதிக பட்சமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்றும் கோவையில் 572 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 3 43, செங்கல்பட்டில் 330, திருவள்ளுரில் 279 பேருக்கு என அதிக பட்சமாக மாவட்டங்களில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon