--- --:--:-- --

கூடுதல் தளர்வுகள் உண்டா? அக்டோபரில் ஊரடங்கு நிலவரம் எப்படி? முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பு!!

14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 8-ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், அக்டோபர் மாதத்தில் ஊரடங்கை நீடிப்பதா? மேலும் பல தளர்வுகளை அறிவிப்பதா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் . காலையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும்,  மாலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் ஆலோசித்த பின் முக்கிய அறிவுப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.

 

நாட்டில் கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது கடந்த மார்ச் 25-ல் முழு ஊரடங்கு போடப்பட்டு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 6 மாதங்களைத் தாண்டியும் நாட்டில் ஊரடங்கு 8 கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்தாலும், அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடைகள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள் என அனைத்தும் நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன. விமான, ரயில் சேவையும் ஓரளவுக்கு இயக்கப்படுகின்றன.

 

ஆனால், மாநிலங்களுக்கு இடையே ரயில், பேருந்து போக்குவரத்து பல மாநிலங்களில் இன்னும் தொடங்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தியேட்டர்கள், பொழுது போக்கு இடங்கள், புறநகர் மின்சார ரயில்கள் போக்குவரத்து போன்றவற்றுக்கு இன்னும் அனுமதியில்லை.

 

இந்நிலையில் 6 மாதங்களைக் கடந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, டில்லி, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோ னா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே ஒரே சீராக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேலாகவும், உயிரிழப்பு 100-க்குள்ளும் பதிவாகி வருகிறது. அதிலும் சென்னையில் மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. சென்னை தவிர்த்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோணா பரவல் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டிப்பதா? அல்லது மேலும் புதிய தளர்வுகளை அறிவிப்பதா? என்பது குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை வெளியிட உள்ளார். அதற்கு முன்னதாக இன்று காலையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், மாலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை முடிவில் நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon