--- --:--:-- --

பொது முடக்க தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!

13

பொது முடக்க நீட்டிப்பு தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது.

 

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். பொது முடக்கத்தில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக காலையில் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

 

அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்க இருக்கிறார். கொரொனா அதிகரித்து வரும் சூழலில் அதனை எவ்வாறு கையாள்வது மருத்துவ வசதிகளை அதிகரிப்பது போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon