--- --:--:-- --

கேரள அரசு மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சுங்கத்துறை..!

6

க்கிய அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக ஆடைகள் பேரிச்சை ஆகியவற்றை இறக்குமதி செய்த புகாரில் கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ஆடைகள் பேரீச்சை மற்றும் ரமலான் பொருட்கள் அடங்கிய 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகுப்புகள் கடந்த மார்ச் மாதம் கேரளாவுக்கு வந்துள்ளன.

 

அந்த பொருட்களை பெற்றுக் கொண்ட மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் மலப்புரம் கோழிக்கோடு பகுதி மக்களுக்கு விநியோகித்தார். வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெகுமதிகளை பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பது விதி.

 

 

இந்த விதியை மீறி செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரிடம் அமலாக்கத் துறை மற்றும் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 18 ஆயிரம் கிலோ மதிப்புள்ள பேரிட்சை உள்ளிட்ட பொருட்கள் பெற்றவை ஒப்புக் கொண்டதையடுத்து 2 வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon