நாயிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அமேசான் நிறுவன ஓட்டுநர்..!
அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் ஓட்டுநர் ஒருவர் பிரம்மாண்ட நாயிடமிருந்து நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. காலிபோர்னியாவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீடு ஒன்றின் சுற்றுச்சுவரில் கதவை திறந்து உள்ளே சென்றவரை 80 கிலோ எடை கொண்ட இங்கிலீஷ் மிஸ்டிக் வகை நாய் ஒன்று விரட்டியது. நொடி பொழுதில் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ஓடிச்சென்று சுவரைத் தாண்டி உயிர் தப்பியுள்ளார். அங்கு இருந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பொருளை வாங்கிக் கொண்டார்.






