நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் காவல்துறை தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் கைது செய்து குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.







