தன்பாலின திருமணங்களை நமது சமூகம் அங்கீகரிக்காது : மத்திய அரசு
தன்பாலின திருமணங்களை நமது சமூகம் அங்கீகரிக்காது
என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது தன்பாலின திருமணங்களை திருமண சட்டத்தில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்ற நமது சட்டமும் சமூகமும் கலாச்சாரமும் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காது எனவும் தெரிவித்தார்.
திருமண உறவின் போது ஏழு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டால் தண்டனை வழங்கப்படும் தன்பாலின திருமணத்தில் யாரை மனைவியாக கருதுவது என வினவிய துஷார் மேத்தா இதில் தமது தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.







