காதலன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்ததால் காதலி தூக்கிட்டு தற்கொலை..!
புதுச்சேரியில் காதலன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த நிலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தட்டாஞ்சாவடி விபிபிபி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரியும் சேதராப்பட்டு சேர்ந்த ஓட்டுனர் சரவணனும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காயத்ரியை வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தனது திருமணத்திற்கு சரவணன் பெற்றோர் சம்மதிக்காத நிலையில் காயத்ரி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதமும் இதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.







