--- --:--:-- --

சென்னையில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் தாக்கிய முயன்ற கும்பல் கைது..!

4

சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவரை கடந்த 9ஆம் தேதியில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடியது.

 

இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிரபல ரவுடி குழந்தையின் 17வயது சகோதரர் உட்பட 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

பின்னர் வளசரவாக்கத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது அந்த கொலையில் தொடர்புடையவரை கொலை செய்யும் திட்டத்தில் அவரது வீட்டிற்கு சென்றபோது இல்லாததால் அவரது உறவின்முறை சகோதரரான பத்தாம் வகுப்பு மாணவரை வெட்டியதாக வாக்குமூலம் அளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon