திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து இருப்பவர்கள் மட்டும் பாதயாத்திரையாக வர அனுமதி..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து இருப்பவர்கள் மட்டும் பாதயாத்திரையாக வர அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பாதையில் நடந்து சென்று தரிசிக்கலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆனால் ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் நடைபயணமாக செல்ல தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் தமிழகத்தில் இருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.







