வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி கரம்..!
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி கரம் நீட்டினார். வடிவேல் பாலாஜி மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் கல்லூரி படித்து முடிக்கும் வரை படிப்பு செலவை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை சிவகார்த்திகேயன் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார் .
வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த் பத்தாம் வகுப்பிலும் மகள் ஸ்ரீதேவி ஆறாம் வகுப்பிலும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.







