ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக முக கவசத்தை உற்பத்தி செய்துள்ளது..!
ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக கவசத்தை உற்பத்தி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொரியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக கவசம் ஒன்றை வடிவமைத்து இருக்கின்றனர்.
இந்த முகக் கவசங்கள் ஆப்பிள் ஊழியர்களுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. முகம் தெளிவாகத் தெரியும் படியான முகக் கவசங்கள் மூன்று லேயர்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகபட்சம் ஐந்து முறை துவைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
புதிய முக கவசங்களின் புகைப்படங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. இந்த முகக் கவசங்கள் ஆப்பிள் கார்ப்பரேட் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.







