--- --:--:-- --

சினிமாதுறைக்கு மீண்டும் திரும்பும் நடிகை ஸ்ரேயா..!

10

சிவாஜி, அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயா சினிமாத்துறையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா சரண் ரஷ்ய காதலரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார்.

இந்த நிலையில் கமனம் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் நுழைய உள்ளார். நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்கள் உடன் அந்த படத்தை சுஜானா ராவ் என்பவர் இயக்குகிறார். அதேபோல் பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுத இளையராஜா இசை அமைக்கிறார்.

கமனம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon