--- --:--:-- --

கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி காவலாளி ஒருவர் பலி..!

8

சென்னை மாதவரத்தில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி காவலாளி ஒருவர் பலியாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருராணி லாஜிஸ்டிக்ஸ் தனது நிறுவனத்தின் ஆரோக்கியம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

 

இன்று காலை கண்டெய்னர் அடுக்கி வைத்துள்ள இடத்தில் பணியில் இருந்தவர் கீழே கிடந்த பொருட்கள் சிலவற்றை சேகரித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் ராட்சத இயந்திரத்தை பின்னோக்கி வந்த ஓட்டுனர் காவலர் ஆரோக்கியத்தை கவனிக்காததால் இயந்திரத்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

 

இந்த சம்பவத்தில் ஆரோக்கியம் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக எந்திரத்தின் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon