--- --:--:-- --

கைதான பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது..!

3

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடைய அவரது காதலி ரியா சக்கரவர்த்தி போதைப்பொருள் வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரியா தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதால் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில் எந்தவித குற்றமும் செய்யாத ரியாவை தவறுதலாக இந்த வழக்கில் செய்து இருப்பதாகவும் அவரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் ரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

Right Menu Icon