கொரொனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையயத்தை கதர் துறை அமைச்சர் திறந்து வைத்தார்..!
சிவகங்கை நகரிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கெசாரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதலாக சீரமைக்கப்பட்ட கட்டடத்தை சிறப்பு சிகிச்சை பயன்பாட்டிற்காக மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் திறந்து வைத்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு செல்லும் 25 நபர்களுக்கு அரசு வழங்கிய சத்து மருந்துகளை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஜெனரேட்டர் இயந்திரங்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்டிட ஒப்பந்தரர் மற்றும் சமூக ஆர்வலர் அயோத்தி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரத்தினவேல், ரோட்டரி சங்கத்தலைவர் திரு.சொக்கலிங்கம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.மஞ்சுளாபாலசந்தர், மாவட்ட அறநிலையக்குழுத் தலைவர் திரு.சந்திரன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் திரு.கருணாகரன், திரு.சசிக்குமார், திரு.தவமணி, சமூக ஆர்வலர் திரு.அயோத்தி, வட்டாட்சியர் திருமதி.மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







