--- --:--:-- --

கோவையில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கட்டிடத்தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது !!!

0.7

கோவை இருகூர் பகுதியைச்சேர்ந்த தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன் தங்களது 17 வயது மகள் மாயமானதாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பழனி காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் விக்னேஷ் கட்டிட வேலை செய்து வந்த போது சிறுமிக்கும், விக்னேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறிய விக்னேஷ் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.

 

இதனிடையே பழனி காவல்துறையினர் இளம் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பழனிக்கு சென்ற போத்தனூர் போலீஸார் விக்னேஷ் கைது செய்த்தோடு சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.

மேலும்,விக்னேஷ் மீது குழந்தைத்திருமண தடுப்புச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

சமீப காலமாக கோவையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon