கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்படும் ஒய் வகை பாதுகாப்பு..!
மகாராஷ்டிரா அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் வகை பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முக்கிய நபர்களுக்கு வழங்கப்படுவது போன்று கமாண்டோக்கள் உட்பட 11 பேர் கொண்ட குழு அவருக்கு பாதுகாப்பு வழங்கும்.
தனக்கு ஒய் வகை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே நாளை மறுதினம் கங்கனா ரனாவத் ஒய் வகை பாதுகாப்புடன் மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர் சுஷாந்த் சிங் விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட கங்கனா ரனாவத் மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் ஆகி விட்டதா என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். மும்பை காவல் துறையினரையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனை வன்மையாக கண்டித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பயம் இருந்தால் கங்கனா ரனாவத் மும்பைக்கு வர வேண்டும் என கூறியிருந்தார்.







