திருப்பூர் மாவட்டம் அவிநாசி டூ மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி டூ மங்கலம் செல்லும் சாலையில் பாலச்சந்திர தாஸ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து மங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த மினி ஆட்டோ மீது மோதி இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.
அதில் பாலச்சந்திர தாஸ் தலையில் பலத்த காயமடைந்து உயிர்போகும் நிலமையில் கிடந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவிநாசி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரதாசை சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இவர். கே. முருகையா மகன் பாலச்சந்திர தாஸ் என்பதும், இவர் அவிநாசி வட்டம் 15 மடத்துப்பாளையம் என்பது தெரியவந்தது.







