--- --:--:-- --

எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுடன் நடிகை ராகினி தொடர்பில் இருப்பது..!

8.1

பெங்களூரில் கைதான கன்னட நடிகை ராகினி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுடன் தொடர்பில் இருப்பது அம்பலமாகியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகை ராகினியை அம்மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

இந்த நிலையில் நடிகை ராகினி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கர்நாடக முதல்வரின் மகனுமான விஜேந்திராவுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக அவரை விஜேந்திரா அழைத்து சென்ற போது எடுத்த வீடியோ வாகும்.

 

இதனுடைய கர்நாடகாவில் போதைப்பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்ட போது அதை கடத்தியதாக துணை நடிகை அணிகா, ரிஜிஷ், முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகினி அரசு அதிகாரி ரவி சங்கர் மற்றும் தொழிலதிபர் ராகுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் நடிகர், நடிகைகளைக் கொண்டு உல்லாச பார்ட்டி நடத்தும் பீரன்கான் என்பவரை டெல்லியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon