பானை மேல் நின்று இரட்டை கம்பு சுற்றிய சிறுமி..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் சுற்றும் போட்டியில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேதாஜி சிலம்பம் அகடமி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது குழந்தை முதல் குடும்பப் பெண்கள் வரை ஏராளமானோர் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினார்கள். அப்போது பானை மீது நின்றவாறே தொடர்ந்து பத்து நிமிடங்கள் இரட்டை கம்பு சிலம்பம் சுற்றிய சிறுமி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அள்ளினார்.






