--- --:--:-- --

ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் என்ன சான்றிதழ்?

02

டிகரும், முதலமைச்சருமான விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது.

 

 

இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மறு ஆய்வு பரிந்துரையை ரத்துசெய்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

இதற்கிடையே படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படம் வெளியாவது தள்ளிப் போனது. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும் தணிக்கையில் 13 கட் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகளை அகற்றும் வகையில் 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் இடம்பெறவுள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

படத்தில் 43 நொடிகளுக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், படத்தின் நீளம் 180 நிமிடங்களாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இம்மாதம் ஜனநாயகம் படம் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon