--- --:--:-- --

130 கோடி இந்தியர்களின் உழைப்பும், நம்பிக்கையும் பாதிக்கவில்லை..!

12

கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் 130 கோடி இந்தியர்களின் உழைப்பு மற்றும் நம்பிக்கையை பாதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையிலான 3-ஆவது தலைமைத்துவ உச்சி மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

 

தற்சார்பு இந்தியா, கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேசிய அவர் கொரொனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். கொரொனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் 130 கோடி இந்தியர்களின் உழைப்பையும் நம்பிக்கையும் அது பாதித்துவிடவில்லை எனக் கூறினார்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டமைப்பு பணிகள் இந்த நெருக்கடியான காலத்திலும் சிறப்பாக நடைபெற்றன என்றும் அண்மைக்காலங்களாக பல்வேறு சீர்திருத்தங்களை நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கூறினார்.

 

மக்கள் தொகை அளவில் மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரொனாவால் உயிரிழப்போர் விழுக்காடு குறைவு என்றும், குணமாவோர் விழுக்காடு அதிகரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

இக்கட்டான சூழ்நிலையில் மனிதர்களை மையப்படுத்திய வளர்ச்சியை நோக்கி நமது அணுகு முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon