--- --:--:-- --

தோனிக்கும் எனக்கும் எந்தவித மோதலும் இல்லை எனக்கூறிய சுரேஷ் ரெய்னா..!

8

தோனியுடன் எந்தவித மோதலும் இல்லை எனவும் விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் எனவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரீக்பஸ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கேப்டன் தோனியுடன் எந்தவித மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கருத்தை தந்தை தட்டியது போல உணர்வதாகவும் ரெய்னா கூறியுள்ளார். தனிமையில் இருந்தாலும் பயிற்சியை தொடர்வதாகவும் விரைவில் சி‌எஸ்‌கே அணிக்கு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் துபாய் சென்றிருந்தனர். ஹோட்டலில் பால்கனியுடன் கூடிய அறை ஒதுக்காததால் ரெய்னா இந்தியா திரும்பிய தாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் சில வீரர்களுக்கு தலைக்கணம் ஏறி விட்டது எனக் கூறி இருந்தார். எனினும், அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்தது.

Leave a Reply

Right Menu Icon