--- --:--:-- --

திருடனை விரட்டி சென்று பிடித்து கீழே தள்ளிய பள்ளி மாணவி..!

10

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வழிப்பறி திருடன் உடனான 15 வயது சிறுமியின் ஆக்ரோஷமான போராட்டம் சிசிடிவி காட்சியை பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள், சிசிடிவி காட்சிகள் வெளியாகும் போதெல்லாம் திருடர்களின் துணிகரச் செயல் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்குவது இயல்பு.

 

அதே நேரத்தில் அந்த காட்சிகள் இப்படியெல்லாம் கூட நடக்கிறது எனப் புரிந்துகொண்டு விழிப்புணர்வோடு செயல்பட உதவுகிறது. ஆனால் இந்த காட்சி இனி இப்படித்தான் துரிதமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.

 

டியூஷன் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பள்ளி சிறுமி தானே என்று நினைத்த திருடர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். தள்ளி விட்டு தப்பிக்க வைத்து அவர்களை விரட்டிச் சென்று பைக்கில் பின்புறம் இருந்த அவனைக் கீழே தள்ளி மல்லுக்கட்டும் தைரியம் எங்கிருந்து வந்திருக்கும்.

 

இந்த சிறுமி கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டும் அவனை விடவில்லை. சுலபமான, எளிமையான டார்கெட் என நினைத்து பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே குறி வைக்கும் வழிப்பறி காரர்களுக்கு இந்த காட்சி நிச்சயம் தயக்கத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon