கோவை சூலூரில் வங்கியின் வாடிக்கையாளர்கள் தகவல் அடங்கிய சுருள்கள் வீசிச்சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !!!
கோவை சூலூர் அருகே குமரன் கோட்டத்தில் கனரா வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏடிஎம் மையத்தை கல்லூரி மாணவர்கள் முதல் அவ்வழியே செல்வோர் பணம் எடுக்க பயன்படுத்துவர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏடிஎம்முக்கு சென்ற வாடிக்கையாளர்கள் அங்கு தங்கள் விவரம் குறித்த தகவல் அடங்கிய சுருள்கள் வெளியே கிடப்பதை பார்த்துள்ளனர். அதில் வாடிக்கையாளர் ஏடிஎம் அட்டையின் எண் மற்றும் வாடிக்கையாளரின் வங்கியில் உள்ள பண விபரம் உள்ளிட்டவை பதிவிடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது,அங்கு வந்த ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர் பயனாளர்கள் குறித்த தகவல் கடந்த வருடத்துடையது என்றும்,இதனால் பயனாளர் குறித்து எந்த தகவலும் போலியாக ஒரு ஏடிஎம் கார்டு மூலம் தயாரிக்க முடியாது என அலட்சியமாக கூறிச் சென்றார். ஆனால், அங்கு வந்த பயனாளர்கள் இதனை கேட்ட உடன் அதிர்ச்சி அடைந்தனர். பயனாளர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டுமென ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.அதனை நிறைவேற்ற வேண்டும் வங்கிகள்.






