--- --:--:-- --

பெற்றோரிடம் இருந்து காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி இளைஞர் அளித்துள்ள புகார்…!

11

புதுக்கோட்டையில் காதல் மனைவியை அவரது பெற்றோர்கள் கடத்தி சென்றதாக இளைஞர் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அருண் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா ஆகியோர் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பிரியா வின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் பிரியாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது, அதன் காரணமாக கடந்த 29ஆம் தேதி அருண், பிரியா இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி பிரியாவின் பெற்றோர் உள்ளிட்ட 50க்கும் உள்ளிட்டோர் பிரியாவை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon