நாடு முழுவதும் இன்று கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ மெயின் தேர்வு..!
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ மெயின் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. இன்று முதல் ஆறாம் தேதி வரை ஜே.இ.இ மெயின் தேர்வு நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று பி ஆர், பி பிளான் படிப்புகளில் சேர்வதற்கான தேர்வு நடைபெறுகிறது.
நாளை முதல் 6ம் தேதி வரை பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் 9.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து 53 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கொரொனா காலத்தில் தேர்வை நடத்துவதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இன்று தேர்வு தொடங்கியுள்ளது.
கொரொனா பரவாமல் இருப்பதற்காக முக கவசம் அணிதல், ஒரு சுழற்சியில் பயன்படுத்திய கணினியை அடுத்த சுழற்சிக்கு பயன்படுத்தாமல் இருத்தல், உடல் வெப்ப பரிசோதனை, ஒரு தேர்வு அறைக்குள் 24 பேருக்கு பதிலாக 12 பேர் மட்டுமே அனுமதித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது.







