இந்தி திணிப்பு விவகாரம்.. கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்.புதிய கமிஷனர் குமாரவேல் பாண்டியன் இன்று பொறுப்பேற்பு !!!
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் இந்தி மொழியை திணிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விண்ணப்ப படிவத்தின் நகல் வைரலாகியது. மேலும், இவ்விஷயம் பொது மக்களிடையேயும்,சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே இரு மொழிக்கொள்கை தான் என்பதை திட்டவட்டமாகவே தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த ஷ்ரவண்குமார் ஜடாவத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி துணை ஆணையரான குமாரவேல் பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தி திணிப்பு விவகாரம் காரணமாக கோவை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த ஷ்ரவண்குமார் ஜடாவத் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் புதிய கமிஷனராக குமாரவேல் பாண்டியன் இன்று கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.






