திருமணம் முடிந்து 50 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை..!
திருச்சி அருகே திருமணமாகி 50 நாட்களே ஆன இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னச்சநல்லூர் அருகில் உள்ள வாழவந்தான் புரத்தை சேர்ந்த அருள்ராஜின் மனைவி கிறிஸ்டி என்பவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதைக்கு கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று உள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அருள் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்டியை தேடி சென்றனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் குட்டை போல தேங்கியிருந்த தண்ணீரில் கிறிஸ்டியின் உடல் நிர்வாண நிலையில் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு தெரியவந்துள்ளது.
கிறிஸ்டியின் கணவர் அருள்ராஜிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 50 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






