--- --:--:-- --

“பாஜக மாநில து.தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை நியமனம்”  கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அதிர்ஷ்டம்!!

ad776007-683c-4437-a9f8-f06ef57e8391

பாஜகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றியே தீருவது என அக்கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் தீவிரமாக உள்ளார். இதனால் மாற்றுக் கட்சியில் உள்ள முக்கியப் புள்ளிகள், மற்றும் திரையுலகம், பொது வாழ்வில் உள்ள பிரபலங்களை வலை வீசி பாஜகவில் இணையச் செய்து வருகிறார். இப்படி பாஜகவில் இணையும் பிரபலங்களுக்கு கைமேல் பலனாக கட்சியில் முக்கியப் பதவிகளும் வழங்கப்படுகின்றன.

 

சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த விக்கெட்டாக திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வமும் பாஜகவில் இணைவது உறுதி என்றே தெரிகிறது.

மாநில துணைத் தலைவர் பதவி

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து திடீரென பதவியை ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கடந்த வாரம் திடீரென பாஜகவில் இணைந்தார். ரஜினி தொடங்கப் போகும் கட்சியில் சேரப் போவதாக அறிவித்திருந்த அண்ணாமலை, திடீரென டெல்லியில் பாஜக தலைவர்கள் முன் அக் கட்சியில் இணைந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் அண்ணாமலையை பாஜக மாநில துணைத் தலைவர் பதவியில் நியமித்துள்ளதாக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon